உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில் அருகே சூதாடிய 7 பேர் கைது

ஆரோவில் அருகே சூதாடிய 7 பேர் கைது

வானூர்: ஆரோவில் அருகே சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி அருகே தமிழக பகுதியான நாவற்குளத்தில் பணம் வைத்து, சூதாடுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 7 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த முனுசாமி மகன் தங்கராஜ், 61; கோட்டக்குப்பத்தை சேர்ந்த கனகராஜ் மகன் ரமேஷ், 52; லாஸ்பேட்டை அவ்வை நகரை சேர்ந்த நாராயணசாமி மகன் சங்கர், 50; ஜீவானந்தம் பாரதி வீதியை சேர்ந்த கோதண்டபாணி மகன் மாணிக்கம், 51; அரியாங்குப்பம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த தெய்வநாயகம், 43; புதுச்சேரி போத்தீஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கோபி, 42; கோயம்புத்துார் சிவராமன் நகரை சேர்ந்த சண்முகம் மகன் மோகன், 50; என்பது தெரிய வந்தது. போலீசார் உடனடியாக அனைவரையும் கைது செய்தனர். மேலும், 35 ஆயிரம் ரூபாய், 4 பைக்குகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை