உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மணி, ஜெ. பேரவை செயலாளர் ஞானவேல், வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன்.எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கபாண்டியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் பாலசந்திரவிநாயகம், ஒன்றிய ஜெ., பேரவைச் செயலாளர் பலராமன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமார் உட்பட அனைத்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை