விழுப்புரத்தில் விவசாய கண்காட்சி
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த விவசாய கண்காட்சியில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.விழுப்புரம் ஆனந்தா மகாலில் விவசாய கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. இதில், வேளாண்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலை., கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., தட்சசீலா பல்கலை., சிமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் பொருட்கள் விற்பனை நிலையங்கள், விவசாய சங்கங்கள் சார்பில் அரங்குகள் அமைத்திருந்தனர்.விவசாயிகள் பலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.இயற்கை விவசாயம், இயற்கை உரங்கள், வேளாண் உபகரணங்கள், இயந்திரங்கள், புதிய தொழில் நுட்பங்கள் குறித்து, கண்காட்சியில் விளக்கினர். விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், பூச்செடிகள் வழங்கினர். தொடர்ந்து, 31ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.