உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புயலால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

புயலால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

வானுார்: வானுார் அடுத்த உப்புவேலுார் கிராமத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக 80 ஆயிரம் எக்டர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டது. பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 81 உதவி வேளாண் அலுவலர்கள் வரவழைக்கப்பட்ட்டுள்ளனர்.ஒவ்வொரு தாலுகாவிற்கும் 6 உதவி வேளாண் அலுவலர்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி, படி விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் நேற்று வானுார் தாலுகாவில் உப்புவேலுார், காரட்டை, கொஞ்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் (திட்டம்) சீனிவாசன், வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர் தங்கம் மற்றும் விவசாயிகள் ஏழுமலை மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !