உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிக மகசூல் தரும் நெல் ரகம் பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

அதிக மகசூல் தரும் நெல் ரகம் பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

வானுார்; வானுார் தாலுகாவில் சொர்ணவாரி மற்றும் கோடை பருவத்திற்கு ஏற்ப குறுகிய கால உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் கோ55 ரகம் சாகுபடி செய்ய வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் செய்திக்குறிப்பு:வானுார் தாலுகாவில் உள்ள கிளியனுார், பரங்கனி மற்றும் திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையங்களில் சொர்ணவாரி மற்றும் கோடை பருவத்திற்கு ஏற்ப நீர் ஆதாரம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் புதிய நெல் கோ-55 ரகம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இந்த ரகம் 110 முதல் 115 நாட்கள் வயதுடையது.ஆடுதுறை 43, கிச்சிலி சம்பா கலப்பு ரகத்திலிருந்து உருவாக்கப்பட்ட ரகமாகும். கோடை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். மிதமான பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. மகசூல் எக்டருக்கு 6,057 கிலோ கிடைக்கக்கூடும்.எனவே, இந்த புதிய ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்கலாம். விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை