மேலும் செய்திகள்
நுாதன முறையில் சாராயம் கடத்திய வியாபாரி கைது
06-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் மது பாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பரசுரெட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை சோதனை செய்ததில் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெயபால் மகன் தியாகு, 30; என்பதும், கூடுதல் விலை க்கு விற்க கடத்தியதும் தெரிந்தது. உடன், தியாகு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 96 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
06-Oct-2025