மேலும் செய்திகள்
போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
29-Dec-2024
விழுப்புரம்: ரயிலில் ஆந்திராவுக்கு மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மது பாட்டில் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை 4:45 மணிக்கு, விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த புதுச்சேரி-சென்னை எழும்பூர் பயணிகள் ரயியிலில் ரயில்வே போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.அதில், வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 28 இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம், அப்பாய்பள்ளி கூட்டு சாலையை சேர்ந்த பிரகாஷ்ராஜ் மகன் அருண்குமார்,26; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்று ஆந்திராவில் விற்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அருண்குமாரை பதிவு செய்தனர். மேலும், அவர் கடத்திய மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
29-Dec-2024