உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க போராட்ட விளக்க கூட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க போராட்ட விளக்க கூட்டம்

திண்டிவனம்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் போராட்ட விளக்க ஆயத்த கூட்டம் நடந்தது.திண்டிவனத்தில் உள்ள தாகூர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் காமராஜ், ரங்கசாமி, பக்கிரி, ராஜேந்திரன், வேம்பு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி, வரும் 24ம் தேதி சென்னை சமூக நல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ