உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள அண்ணா அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரிகளின் ஆசிரியர் சங்கம் சார்பில் கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை வளாகத்திற்கு இணையாக உறுப்பு கல்லுாரி ஆசிரியர்களுக்கும் சமமான சலுகைகள் நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழகம் நுழைவாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பேராசிரியர் சுதா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கஜலட்சுமி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை