உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு;தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்பங்களை www.tngasa.inஎன்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை கடந்த 7ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவுக் கட்டணம் மட்டும் 2 ரூபாய். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை. பதிவுக் கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம்.விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிகவியல் மற்றும் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் போன்ற பட்டப் படிப்புகள் உள்ளது.மொழிப்பாடங்கள் தவிர, மற்ற வகுப்புகள் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி வகுப்புகளாக நடத்தப்படுகின்றன. அனைத்துப்பாடங்களும் இரண்டு சுழற்சிகளில் நடத்தப்படுகிறது. கணினிப் பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை