பாராட்டு விழா
செஞ்சி; செஞ்சி ஒன்றியம் பொன்பத்தி அரசு நடுநிலைப் பள்ளி, செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் பணி ஓய்வு பெறும் சமையல் உதவியாளர்கள் சி.முனியம்மாள், கே. முனியம்மாள் இருவருக்கும் சால்வை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், சீத்தாலட்சுமி, ஏ.பி.டி.ஓ., பழனி, குமார், சத்துணவு பிரிவு இளநிலை உதவியாளர்கள் சரஸ்வதி, எழிலரசி, ஸ்ரீமதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.