ராணுவ வீரரின் மகள் மனிஷா விளையாட்டு போட்டியில் சாதனை
விழுப்புரம்: விழுப்புரம் பள்ளி மாணவி மனிஷா, மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.மகாராஷ்டிராவை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார். இவரது மகள் மனிஷா. தற்போது விழுப்புரம் மாவட்டம், வெள்ளையாம்பட்டு கிராமத்தில் வசிக்கிறார். பனமலைப்பேட்டையில் உள்ள பள்ளியில், 5 ம் வகுப்பு வரை பயின்ற மனிஷா, விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் தற்போது பிளஸ் 1 படிக்கிறார்.பள்ளி உடற்கல்வி இயக்குநர் தமிழ்மணி மூலம், ேஹண்ட் பால் விளையாட்டில் தீவிரமாக பயிற்சி பெற்றார். இம்மாணவி, மாவட்ட மற்றும் கடந்த மே மாதம் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றுள்ளார். விளையாட்டில் மட்டும் இன்றி, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கும், மாணவி மனிஷாவை பாராட்டி, பள்ளியின் தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் பரிசளித்தனர். மாணவியின் திறமையை பாராட்டி, விழுப்புரம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.