உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

விழுப்புரம் : விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், சுகாதாரத்துறை சார்பில் போதை பழக்கம் ஒழிப்பு மற்றும் மனநலம் காத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். மாவட்ட மனநல மருத்துவ ஆலோசகர்கள் வசந்த், ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு மனநலம் காத்தல் குறித்தும், போதை பொருள் ஒழிப்பு, அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகள், மொபைல் போனை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி