உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அம்மன் கோவிலில் பாலாலயம்

அம்மன் கோவிலில் பாலாலயம்

திண்டிவனம்: திண்டிவனம் இலுப்பை தோப்பு ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது.இக்கோவிலில், கும்பாபிேஷகத்திற்கான திருப்பணி நடைபெற உள்ளதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு பாலாலயம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, நகர மன்ற தலைவர் நிர்மலா, முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், பால்பாண்டியன் பாத்திரக்கடை பால்பாண்டியன் ரமேஷ், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சந்தானம், மதிவாணன், ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.இதேபோன்று, கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால் பாலாலயம் நடந்தது.இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ