உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்

விழுப்புரம்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் நடைபெற்றது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், அன்னியூர் சிவா ஆகியோர், 1,005 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 12,147 உறுப்பினர்களுக்கு ரூ.93.19 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் மற்றும் 162 மகளிருக்கு அடையாள அட்டையை வழங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், 'மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன், கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.650 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.1,015 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இரு மடங்காக இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநர் செந்தில்வடிவு உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி