தானியக்களம் அமைக்க பூமி பூஜை
செஞ்சி : மாத்துார் திருக்கை ஊராட்சியில் தானியக்களம் அமைக்க பூமி பூஜை நடந்தது.செஞ்சி ஒன்றியம், மாத்துார் திருகை ஊராட்சி, புதுமாத்துாரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு, ரூ. 9.20 லட்சம் மதிப்பில் புதிய தானியக்களம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.பங்குத்தந்தை லெனின் ஆன்ரூஸ் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை செய்தார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தானியக்களம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். தி.மு.க., மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் தாஸ், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர் குமார், நிர்வாகிகள் சக்திவேல், ரவி, செல்வம், கருணாகரன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.