உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலை உணவு விரிவாக்க திட்டம் துவக்கம் 

காலை உணவு விரிவாக்க திட்டம் துவக்கம் 

கண்டமங்கலம் : ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியில்  காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர் வன்னிஅரசு துவக்கி வைத்தார். கண்டமங்கலம் ஒன்றியம், கொடுக்கூர் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில், மாணவ–மாணவிகளுக்கு காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு சமூகநீதி நலத்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமையேற்று மாணவ–மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் மாணவ–மாணவிகளின் கல்வி போதிக்கும் முறை மற்றும் குறைகளை கேட்டறிந்தர். அப்போது கிராம பொதுமக்கள் பல்வேறு  கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.  அதில், பள்ளிக்கு சுற்று மதில் சுவர், கூடுதல் கழிப்பறை கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்தன. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமார், விக்கிரவாண்டி தாசில்தார் மகாதேவன், கூடுதல் தாசில்தார் பிரசாந்த், வருவாய் ஆய்வாளர் கவிதா, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., க்கள் இந்திராகாந்தி, சிவகுமார் வி.ஏ.ஓ., நபிஷாபானு ஊராட்சி தலைவர் ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !