உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் குடித்து குத்தாட்டம் போட்ட கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு

ரயிலில் குடித்து குத்தாட்டம் போட்ட கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு

திண்டிவனம், : சென்னை எழும்பூரிலிருந்து நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு பயணியர் விரைவு ரயில் புதுச்சேரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில், முன்பதிவில்லா பெட்டியில் சென்னை லயோலா கல்லுாரி மாணவர்கள் 11 பேர் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் புகை பிடித்தும், மது அருந்தியும் போதையில் சக பயணியருக்கு இடையூறாக குத்தாட்டம் போட்டபடி வந்தனர்.இது குறித்து பயணியர் சிலர், சென்னை ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு 8:45 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., தேசி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, குத்தாட்டம் போட்ட 16 பேரை ரயிலிலிருந்து இறக்கி, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில், புதுச்சேரி சுற்றுலா செல்வது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த மொபைல் போன்கள், புளூ டூத் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களில் ஆறு பேர் போதையில் இருந்தது தெரிய வந்தது. கல்லுாரி மாணவர்கள் உட்பட 16 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அசோகன்
செப் 22, 2024 18:47

இவர்களை எதுக்கு ஜாமீனில் உடனும்? நாலுநாளாவது உள்ளே வெச்சிருந்தாத்தானே அடுத்த முறை குடித்து குத்தாட்டம் போட பயப்படுவானுங்க?


Ms Mahadevan Mahadevan
செப் 22, 2024 18:33

மது விலக்கு என்றைக்கு எடுத்தார் களோ அன்றைய நாளில் இருந்தே தமிழகம் சீரழிந்து விட்டது. எல்லா விதமான குற்றங்களுக்கும் காரணமான மதுவை இப்பவாது ஒழிப்பார்களா?


N Sasikumar Yadhav
செப் 22, 2024 12:28

லயோலா கல்லூரி என்றாலே ஜாமின் கேட்காமலேயே கொடுப்பார்கள் ஜார்ஜ் பொன்னையா போட்ட ஓட்டுப்பிச்சையால் ஆட்சிக்கு வந்தவர்கள்


Kanns
செப் 22, 2024 10:17

Arrest-Prosecute-Punish All Such AntiSocials, SexHungry Girls-Boys Romeo-Juliets & their Encouragers judges


raja
செப் 22, 2024 08:33

திருட்டு திராவிடம் மாடல் குடி..இந்தியாவிலே நம்பர் ஒன்னு... ஏலே சின்னவனே எட்ரா வண்டிய ஒட்ரா ஒன்கொள் கோவால் புறத்துக்கு...


வைகுண்டேஸ்வரன்
செப் 22, 2024 17:19

பொய்யான தகவல். இந்தியாவிலேயே குடியில் முதலிடம் உத்திரப் பிரதேசம் தான். ஒன்றிய அரசின் தகவல் அட்டவணை இணையத்தில் இருக்கிறது பாருங்கள். எவனோ 10 பேர் குடிச்சுட்டு அலப்பறை பண்ணினால் அரசாங்கம் காரணமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை