அனுமதியின்றி பேனர் த.வெ.க., பிரமுகர் மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த த.வெ.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் ரயில்வே மேம்பால பகுதியில் அனுமதியின்றி வைத்திருந்த அரசியல் கட்சி பேனர்களை, டவுன் போலீசார் நேற்று முன்தினம் அகற்றினர். அங்கு அனுமதியின்றி, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக டிஜிட்டல் பேனர் வைத்திருந்ததாக, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், மந்தகரையைச் சேர்ந்த த.வெ.க., பிரமுகர் முகமதுஅசாருதின், 25; மீது, டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.