விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது வழக்கு
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஹிந்து மதத்தின் சைவ, வைணவ வழிபாட்டு முறைகளை இழிவுப்படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து நேற்று முன்தினம் விழுப்புரம் நகராட்சி திடல் எதிரில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் கணேசன் ராஜ், 60; கிராம பூசாரிகள் சங்க தலைவர் சின்னதுரை, 74; உட்பட 100 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.