உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்திரை தாள் தொகை கோரிய வழக்கு நுகர்வோர் ஆணையத்தில் விசாரணை

முத்திரை தாள் தொகை கோரிய வழக்கு நுகர்வோர் ஆணையத்தில் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பயன்படுத்தாத முத்திரை தாள்களுக்கு, திருப்பு தொகை, பதிவு கட்டணம் திரும்பி வழங்காத அதிகாரிகள் மீதான வழக்கு நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவர். வழுதரெட்டியில் உள்ள இவரது 28 சென்ட் நிலத்தில், 14 சென்ட் நிலத்தை மகன் காமராஜ்க்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுக்க ரூ. 22 ஆயிரத்திற்கு முத்திரை தாள்கள் வாங்கி எழுதினார். விழுப்புரம் இணை சார் பதிவாளர் 2 அலுவலகத்தில் பதிவு கட்டணம் ரூ.8,360 செலுத்தி ஆரோக்கியசாமி பதிந்தார். பதிவாளர், இடத்தை நேரில் கூட்டாய்வு செய்ய வேண்டும் என நிலுவையில் வைத்தார். பத்திரம் பதிய காலதாமதம் ஏற்பட்டதால், ஆரோக்கியசாமி பதிவு அலுவலகத்தில் இருந்து பத்திரத்தை திரும்ப பெற்றார். பயன்படுத்தாத முத்திரை தாள்களுக்கு உரிய தொகை, பதிவு செய்ய செலுத்திய தொகை மொத்தம் ரூ.30,360 திருப்பி வழங்குமாறு, கடந்த 2024ம் ஆண்டு பிப்., 13ம் தேதி இணை சார் பதிவாளர் எண் 2 அலுவலகத்தில் மனு அளித்தார். முத்திரை தாள்கள் பிரிவு தனி தாசில்தாரிடம் பெற்று கொள்ள பதில் கொடுத்தனர். தனி தாசில்தாருக்கு முத்திரை தாள்களை பதிவு தபால் மூலம் அனுப்பினார். பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளரிடம் பெற பதில் கிடைத்தது. மாவட்ட பதிவாளருக்கு பதிவு தபாலில் முத்திரை தாள்கள் அனுப்பினார். வருவாய் ஆர்.டி.ஓ., விடம் மனு செய்து பெற கூறினர். கடைசியாக கடந்த ஜூலை 22ம் தேதி வருவாய் ஆர்.டி.ஓ., க்கு, அசல் முத்திரை தாள் அனுப்பியும் தொகை திரும்ப கிடைக்கவில்லை. மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு நுகார்வோர் ஆணையத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நுகர்வோர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா முன்னிலையில் விசாரணை நடந்தது. இவ்வழக்கு விசராணை வரும் மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி