வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதுக்கும் ஓட்டு இருந்திருந்தா போச்சு
Still a lots of DMK s are roaming around. Catch them too
திண்டிவனம்,:திண்டிவனத்தில் பன்றிகளை பிடிப்பதற்கு நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகரப்பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் நடமாட்டத்தால், தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து கவுன்சிலர்களும், வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வசந்தபுரம், கங்கா நகர், சந்தைமேடு உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் தனியார் நபர்கள் மூலம் பன்றிகள் வலை போட்டு பிடிக்கும் பணி துவங்கியது. முதல் நாளான நேற்று மட்டும், 40க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டன. இதேபோல, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களையும் பிடிக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இதுக்கும் ஓட்டு இருந்திருந்தா போச்சு
Still a lots of DMK s are roaming around. Catch them too