மத்திய மாவட்ட தி.மு.க., பொதுமக்களுக்கு நலத்திட்டம்
விழுப்புரம்,: மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வி.அகரம், மோட்சகுளம், எல்.ஆர்., பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 3,600 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளர் புஷ்பராஜ், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய சேர்மன் வாசன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, ஒன்றிய நிர்வாகிகள் அசோக்குமார், சரவணன், ராஜசேகர், ராஜேந்திரன், முரளிதரன், முருகன், குமணன், பாபு, ராமானுஜம், செல்வகுமார், கவுன்சிலர்கள் குணவதி செந்தில், சிவரஞ்சனி ராஜாராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.