உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா

மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா

விழுப்புரம்; விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மதுரை வீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் 18ம் ஆண்டு அலங்கார திருவிழா நடந்தது.கடந்த 7ம் தேதி பந்தக்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது.நேற்று 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுளை கோவில் நிறுவனர் வாசுதேவன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ