உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அருங்காட்சியக அமைவிடம் கலெக்டர் நேரில் ஆய்வு

அருங்காட்சியக அமைவிடம் கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு அருங்காட்சிகம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், தொல்லியல் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கை ஏற்று, அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்ரோடு அடுத்த பனங்குப்பம் கிராமத்தில், பயன்பாடில்லாத நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய பங்களா இடத்தில், அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமாக, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு அருங்காட்சியகத்திற்கு தேர்வான இடத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:பனங்குப்பம் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் பழைய பங்களா இடத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 1.30 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகத்திற்கான கட்டடம், உட்புறக்காட்சி அறை, தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான அலமாரி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து, அதற்கான இட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி