உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரியில் இயற்கை வழிப்பூங்கா அமைக்க கலெக்டர் ஆலோசனை

ஏரியில் இயற்கை வழிப்பூங்கா அமைக்க கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மருதுார் ஏரியில் இயற்கை வழிப்பூங்கா அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., லட்சுமணன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் நகராட்சியில் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட மருதுார் ஏரியில் 50 ஏக்கர் பரப்பளவில் இயற்கை வழிபூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா அமைப்பது தொடர்பாக, நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், இயற்கை வழி பூங்காவில், இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்புகளோடு, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி வழித்தடம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கான மாதிரி வரைபடம் தயாரித்து வழங்க, துறை சார்ந்த அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ