பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
வானூர்: பல்கலைக்கழக தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த வானூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் மன்ற விழா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் தேவநாதன் வரவேற்றார்.புதுச்சேரி கிறிஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மாணவி சுபிக் ஷா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.