உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணிநிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பாராட்டு விழா

விழுப்புரம்: ஆலம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மோனிக் அந்தோணியம்மாளுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.பட்டதாரி ஆசிரியர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி கோபால், ஊராட்சி தலைவர் ராஜகுமாரி சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், துணை தலைவர் விஜயா சுப்ரமணியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மரியஜோசப் சிறப்புரையாற்றினார்.வட்டார கல்வி அலுவலர்கள் அஞ்சலாதேவி, பானுமதி, ரவிச்சந்திரன், ராமதாஸ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசு, ஆசிரிய பயிற்றுனர் ஷாஹிதுன்னிசா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜான்போஸ்கோ ஆகியோர் பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மோனிக் அந்தோணியம்மாளை பாராட்டி, வாழ்த்தினர். ஆசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை