மேலும் செய்திகள்
கொடியேற்றுதல்
01-Dec-2024
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு வடக்கு மாவட்ட காங்., சார்பில் நிவராண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், நகர தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் செல்வபெருந்தகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி,பிரட், பேர்வை, துண்டு ஆகியவற்றை 150 பேருக்கு வழங்கினார்.வட்டார தலைவர்கள் காத்தவராயன், கண்ணன், அஜீஸ், புவனேஸ்வரன், இருதயராஜ், திண்டிவனம் நகர தலைவர் வினாயகம், முன்னாள் தலைவர் காமராஜ், ஊடக பிரிவு மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன், தொகுதி தலைவர் பர்வீன் பானு உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Dec-2024