உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மைதானத்தில் கட்டுமான பொருட்கள் விளையாட்டு வீரர்கள் இடமின்றி தவிப்பு

மைதானத்தில் கட்டுமான பொருட்கள் விளையாட்டு வீரர்கள் இடமின்றி தவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் கட்டுமான பொருட்களை வைத்துள்ளதால் மாணவர்கள் விளையாட இடமின்றி சிரமப்படுகின்றனர். விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் போலீஸ் மைதானம் உள்ளது. இங்கு, அரசு நிகழ்ச்சிகள் நடப்பது மட் டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள் பல ரும் கிரிக்கெட், வாலிபால் விளையாடுவது வழக்கம். மைதானம் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் ஒப்பந் ததாரர்கள், பணிக்கு தேவையான கட்டு மான பொருட்கள் இரும்பு கம்பிகள், எம் சாண்ட்,கொட்டி வைத்துள்ளனர். மாத கணக்கில் மைதானத்தை ஆக்கிரமித்துள்ள கட்டுமான பொருட்களால், கோடை விடுமுறை நாட்களில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்கள் விளையாட இடமின்றி மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர். கட்டுமான பொருட்கள் வைக்க பெருந்திட்ட வளாகத்தில் ஏராளமான இடங்கள் உள்ளது. எனவே, மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி