மேலும் செய்திகள்
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
27-Mar-2025
விக்கிரவாண்டி : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, விக்கிரவாண்டியில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கரன் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள், காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முன்னதாக இறந்த சுற்றுலா பயணிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர்கள் முருகன், பிரகாஷ், வீரவேல், பாஸ்கரன், ராஜபாண்டியன், அசோக், மோகன், சதீஷ், பார்த்திபன், சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Mar-2025