உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கான சாகுபடி குறித்த பயிற்சி

விவசாயிகளுக்கான சாகுபடி குறித்த பயிற்சி

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வட்டாரம் கொங்கம்பட்டு கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமையேற்று நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் அதிக விளைச்சல், தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.வேளாண்மை அலுவலர் விஜய் சொட்டுநீர் பாசனம், நுண்ணூட்டசத்துகள் குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் சுப்புராஜ் துறை சார்ந்த திட்டப் பணிகள், விதை கரணை நேர்த்தி குறித்தும் பேசினர். நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை கரும்பு விரிவாக்க அலுவலர் நாகேந்திரன், கரும்பு உதவியாளர் பத்மநாபன் ஆகியோர் ஒரு பரு கரணை மானியத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.வட்டார தொழில் நுட்ப மேலாளர் தேன்மொழி ஆத்மா திட்ட பணிகள் குறித்தும் கரும்பில் களை மேலாண்மை குறித்தும் விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அருள்பாபு, வீரமணி, பயிர் அறுவடை பரிசோதனையாளர் பிரவீனா ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பரிமளா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ