உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி பி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

செஞ்சி பி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

செஞ்சி: செஞ்சி பி ஏரியில் கோடை வெயில் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மீன்கள் செத்து மிதக்கின்றன.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. செஞ்சியில், திருவண்ணாமலை சாலையில் உள்ள பி ஏரியில் சித்திரை மாத கோடை வெயிலின் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் நுாற்றுக்கணக்கான கெண்டை மீன்கள் செத்து மிதக்கின்றன.இந்த ஏரியில் பலரக மீன்கள் இருக்கும் இருந்தாலும், ஒரு கிலோ எடை வரையிலான கொண்ட கெண்டை மீன்கள் மட்டுமே இறந்து மிதக்கின்றன. இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் அழுகி வருவதால் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. ஏரிக்கரையில் நடைப்பயிற்சி செல்வோர், துர்நாற்றத்தில் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.ஏரியில் செத்து கரை ஒதுங்கும் மீன்களை தெரு நாய்கள் சாப்பிட்டு வருகின்றனர். கொக்கு, நாரை, மீன் கொத்தி உள்ளிட்ட பறவைகள் இறந்து கிடக்கும் மீன்களை தொடுவதில்லை. அவை ஏரியில் உயிரோடு இருக்கும் மீன்களை மட்டும் பிடித்து தின்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை