உள்ளூர் செய்திகள்

கார் மோதி மான் பலி

விழுப்புரம் : திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைலாபுரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் நேற்று மாலை 3:00 மணியளவில் சாலையை கடக்க முயன்றது. அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார் புள்ளிமான் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது.தகவலறிந்த திண்டிவனம் வனச்சரக அலுவலர்கள், மான் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.மான் மீது மோதிய காரின் முன்பக்கம் சேதமாகிய நிலையில், காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.இந்த விபத்தால் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ