உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவெண்ணெய்நல்லுாரில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுாரில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். இருவேல்பட்டு ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வேளாண்மை துறையின் விதை சுத்திகரிப்பு நிலையம், பேரங்கியூர் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைத்து நடக்கும் மரக்கன்றுகள் வளர்ப்பு. மேல்தணியாலம்பட்டு ஊராட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் தனிநபர் விவசாயி 28 ஏக்கர் பரப்பளவில் வளர்த்து வரும் ஆர்க்கிட் மலர் செடிகள். சேமங்கலம் ஊராட்சியில் 4 ஏக்கர் பரப்பளவில் கொய்யா கன்று வளர்ப்பு உள்ளிட்ட திட்ட பணிகளை ஆய்வு செய்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் ஈஸ்வர், துணை இயக்குனர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, தோட்டக்கலை துறை இயக்குநர் அன்பழகன், தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, பொறியாளர் இளையராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !