உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அச்சமின்றி நீட் தேர்வை எழுத தினமலர் நாளிதழ் வழிகாட்டியுள்ளது சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுபஸ்ரீ

அச்சமின்றி நீட் தேர்வை எழுத தினமலர் நாளிதழ் வழிகாட்டியுள்ளது சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுபஸ்ரீ

விழுப்புரம்: 'மாணவர்கள் அச்சமின்றி நீட் தேர்வை எழுத, தினமலர் நாளிதழின் மாதிரி நீட் தேர்வு வழிகாட்டியுள்ளது' என விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுபஸ்ரீ தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:விழுப்புரத்தில் 'தினமலர்' நாளிதழ், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நீட் மாதிரி தேர்வை சிறப்பாக நடத்தியுள்ளது. 'தினமலர்' நாளிதழ், மாணவர்களின் அறிவை வளர்க்கும் பட்டம் இதழை வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருவதோடு, மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வையும் நடத்தி, மாணவர்களின் அச்சத்தை போக்கி அனுபவத்தை வழங்கியுள்ளது.நீட் மாதிரி தேர்வினால், மாணவர்களுக்கு, மெயின் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான டைம் மேனேஜ்மென்ட், எப்படி போக வேண்டும் என்ற முன்னேற்பாடுகளை சொல்லிக் கொடுத்துள்ளது. இப்பணியில், சரஸ்வதி பள்ளியும் சேர்ந்துள்ளது பெருமை.தேர்வுக்கு செல்லும்போது ஆபரணங்கள், வளையல், ஹேர்பேண்ட் போன்றவை தவிர்க்கவும், எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், கடைசி நேரத்தில் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற அனுபவத்தை மாணவர்கள் பெற்றுள்ளனர்.தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் வரும், அதில் மாணவர்கள் படித்தது, எது விடுபட்டது என்பதை ஆய்ந்து, விடுபட்டதை திட்டமிட்டு படிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த மாதிரி தேர்வு, மேலும் ஒரு பூஸ்டப்பாக அமைந்திருக்கிறது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். டாக்டர் ஆவேன் என்ற உறுதியோடு, விடா முயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு முதல்வர் சுபஸ்ரீ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ