மேலும் செய்திகள்
தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
16-Sep-2025
செஞ்சி : விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளில் புதிதாக 1.13 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த ஜூலை 1ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதியில் இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 955 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்றார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, நகர செயலாளர் கார்த்திக் உடன் இருந்தனர்.
16-Sep-2025