உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பால்பாண்டியன் பாத்திரக்கடையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

பால்பாண்டியன் பாத்திரக்கடையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

திண்டிவனம்: திண்டிவனம் நேரு வீதியிலுள்ள பால்பாண்டியன் பாத்திரக்கடையில், தீபாவளியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியுடன் பொருட்கள் விற்பனை நடந்தது. திண்டிவனத்தில் மூன்றாம் தலைமுறையாக, நேரு வீதியில், பால்பாண்டியன் பாத்திரக்கடை செயல்பட்டு வருகின்றது. இதேபோல் காமாட்சியம்மன் கோவில் வீதியிலும், பால்பாண்டியன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ேஹாம் அப்ளையன்ஸ் கடை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்களும் சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றது. சிறப்பு சலுகையில் பொருட்கள் வழங்கப்படுவதால், வழக்கத்தை விட அதிகமான அளவில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். திருமண சீர்வரிசை பொருட்கள், சிறப்பு சலுகை விலையில் வழங்கப்படுவதாக உரிமையாளர் பால்பாண்டியன் ரமேஷ், பால விக்னேஷ் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ