தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்
திண்டிவனம்; திண்டிவனத்தில் தே.மு.தி.க., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. திண்டிவனம், மயிலம், வானுார், செஞ்சி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காதர் பாஷா வரவேற்றார். துணைச் செயலாளர்கள் சுந்தரேசன், வெங்கடேசன், பொருளார் தயாநிதி, அவைத்தலைவர் கணபதி, கேப்டன் மன்ற மாநில துணைச் செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 13ம் தேதி திண்டிவனம் அடுத்த ஆத்துார் கிராமத்திற்கு வருகை தரும் விஜயகாந்த மகன் பிரபாகரனுக்கு, சிறப்பான வரவேற்பு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.