உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட 11 மற்றும் 12வது வார்டு பகுதியில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனை க்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர செயலாளர்கள் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணை சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலன் காக்கும் ஸ்டாலின்' போன்ற மக்கள் பயன்பாடு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் சுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், நகர நிர்வாகிகள் சையத் நாசர், தில்லை காமராஜ், வார்டு செயலாளர்கள் மகேந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள் கமலா கலியபெருமாள், பாக்கியராஜ் நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், நிர்வாகிகள் சரவணன், சுந்தரம், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை