தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் ராஜா சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் (தெற்கு) இளையராஜா வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சூடாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், நிர்வாகிகள் சீனு, பிரபு, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், 'ஒவ்வொரு தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி தே.மு.தி.க.,விடம் உள்ளது. கடந்த காலத்தில் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையாததால் வெற்றி வாய்ப்புகளை இழந்தோம். அ.தி.மு.க., மீது இருந்த கோபத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். இதனால் தி.மு.க., ஆட்சியில் உள்ளது. நாங்கள் பலவீனமாகவில்லை. வரும் தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் முடிவை தே.மு.தி.க., எடுக்கும்' என்றார். வடக்கு நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.