தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
செஞ்சி : செஞ்சியில் தி.மு.க., வின் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தேசபாட்டை மற்றும் எம்ஜிஆர் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சித் சேர்மன் முத்தையா ரலி முன்னிலையில் மஸ்தான் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, தொண்டரணி பாஷா, நிர்வாகிகள் பழனி, ஆனந்த், சையத் சர்தார் ஆகியோர் உடனிருந்தனர்.