மேலும் செய்திகள்
தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
07-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி மீதான பாலியல் வன்முறையை கண்டித்து தே.மு.தி.க., சார்பில், தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி, விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளரான வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், சென்னை பல்கலை மாணவி மீதான பாலியல் அத்துமீறல் சம்பவத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசு வெள்ள நிவாரண உதவி வழங்கப்படவில்லை. தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.இதில், மாவட்ட அவைத்தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் தயாநிதி, கேப்டன் மன்ற மாநில துணை செயலாளர் ராஜசந்திரசேகர், நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் வழக்கறிஞர் மனோ, சமூக வலைதள அணி செயலாளர் சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Jan-2025