உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் முதல்வரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பழனி தலைமை தாங்கினார். பொருளாளர் முருகன் வரவேற்றார். பேச்சாளர் ஆலந்துார் மலர்மன்னன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன் தயாளன், பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரேசன், பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் திருமலை, விஜயன், புஷ்பவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி