திருப்பாச்சனுாரில் தி.மு.க., ஆய்வு கூட்டம்
விழுப்புரம்; விழுப்புரம் அருகே தி.மு.க., ஆய்வு கூட்டம் நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், தொகுதி முழுதும் பொது உறுப்பினர்கள் ஆய்வு கூட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், கோலியனுார் தெற்கு ஒன்றியம், திருப்பாச்சனுார் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் முருகவேல், சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட விவசாய அணி கேசவன், ஒன்றிய அவை தலைவர் தேவகிருஷ்ணன், துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் காசிநாதன், ஊராட்சி தலைவர் சரவணன், இலக்கிய அணி ராஜ், கிளை செயலாளர் சதாசிவம், மணிகண்டன், ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, வெற்றி, கவுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.