உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உண்டியலை உடைத்து திருடிய போதை ஆசாமி சிக்கினார்

உண்டியலை உடைத்து திருடிய போதை ஆசாமி சிக்கினார்

செஞ்சி; கோவில் உண்டியலை உடைத்து திருடிய காணிக்கையை மூட்டையாக தலைக்கு வைத்து துாங்கிய, போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிறுகடம்பூர், சந்தைமேடு பிள்ளையார் கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை திருடு போனது.இது குறித்து கோவில் தர்மகர்த்தா சரவணன் அளித்த புகாரில், செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10:00 மணி அளவில் மேல்களவாய் கூட்ரோட்டில் ஒருவர் போதையில் மயங்கி கிடந்தார். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார், போதை நபரை தட்டி எழுப்பி சோதனை செய்தனர். அதில், அந்த நபர் தலைக்கு அடியில் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது சில்லரை காசுகளாக இருந்தன.பின், அந்த நபரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தினர்.அதில் அவர், மேல்மலையனுார் அடுத்த நீலாம்பூண்டி, கணேசன் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் வரதன், 32; என்பதும், பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து வரதன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, உண்டியல் காணிக்கையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ