உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லூரியில் போதை விழிப்புணர்வு

வானுார் அரசு கல்லூரியில் போதை விழிப்புணர்வு

வானூர்: வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கத்தின் சார்பில், போதை பொருள் ஒழிப்பு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சங்க ஒருங்கிணைப்பாளர் காந்திமதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் வில்லியம் துவக்கி வைத்து, இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருட்களின் அபாயம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மதர் டிரஸ்ட் மேலாளர் கோபால் பங்கேற்று, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை