மேலும் செய்திகள்
வாகனம் மோதி மூதாட்டி பலி
14-Jun-2025
விக்கிரவாண்டி: மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 65; விவசாயி. இவர் கடந்த 29ம் தேதி, தனது மொபட்டில் ஆசூர் நோக்கி செல்லும் போது ஏரிக்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.விக்கிரவாண்டி போலீசில் மகன் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
14-Jun-2025