உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி மோதி முதியவர் பலி டிரைவர் கைது

லாரி மோதி முதியவர் பலி டிரைவர் கைது

மயிலம்: மயிலம் அருகே, ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். விழுப்புரம், ராம் நகரை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் 70; இவர் சொந்த வேலையாக ஸ்கூட்டரில் நேற்று காலை 9:00 மணியளவில், விழுப்புரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். தென்பசியார் கிராமம் அருகே சென்ற போது, பின்னால் வந்த ஈச்சர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த லாரியை, கடலுார் மாவட்டம், செம்மண்டலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 54; என்பவர் மது போதையில் ஓட்டி வந்தது தெரிந்தது. விபத்து நடந்ததும் அங்கு நிற்காமல் அவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். தகவல் அறிந்த மயிலம் போலீசார் லாரியை பின் தொடர்ந்து சென்று ஜக்கம்பேட்டை அருகே மடக்கி பிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அப்துல் ரஷீத் சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை