மேலும் செய்திகள்
கோவிலில் திருடிய 2 சிறுவர்கள் சிக்கினர்
23-Nov-2024
செஞ்சி: செஞ்சி அருகே வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கிய மூதாட்டியை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வந்தனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் வராகநதியின் அருகே மெத்தை வீட்டில் ராஜேஸ்வரி, 70; என்பவரின் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வீடு வெள்ளம் சூழ்ந்தது. எந்த திசையிலும் வெளியே வர முடியாமல் வீட்டில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்க எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து மரக்காணத்தில் முகாமிட்டிருந்த பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த மீட்பு குழுவினர் கயிறு மற்றும் ரப்பர் டயர்களை கொண்டு நீந்தி சென்று முதுகில் சுமந்து நீந்தி வந்தனர்.மீட்கப்பட்ட மூதாட்டியை மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர். இச்சம்பவத்தின் போது செஞ்சி தாசில்தார் ஏழுமலை மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
23-Nov-2024